follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2இலங்கை ரயில்வே தனியார் மயமாக்கப்படாது

இலங்கை ரயில்வே தனியார் மயமாக்கப்படாது

Published on

இலங்கை ரயில் சேவை தனியார் மயமாக்கப்பட மாட்டாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.

புகையிரத திணைக்களம் தொடர்ச்சியாக நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் எனவே பல மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இலங்கை துறைமுக அதிகாரசபையில் ஏற்பட்ட மாற்றத்தைப் போன்று புகையிரத திணைக்களமும் மறுசீரமைக்கப்பட்டு அதிகாரசபையாக மாற்றப்பட வேண்டும் என அமைச்சர் கருதுகின்றார்.

புகையிரத திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றுவதன் மூலம் அதிகாரிகள் சுயாதீனமான தீர்மானங்களை எடுப்பதுடன் பொதுமக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்க முடியும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...