follow the truth

follow the truth

May, 11, 2025
Homeவணிகம்புத்தாக்கமான ஏற்றுமதி உத்திகளுடன் அதன் உலகளாவிய இருப்பை உறுதி செய்யும் Alumex

புத்தாக்கமான ஏற்றுமதி உத்திகளுடன் அதன் உலகளாவிய இருப்பை உறுதி செய்யும் Alumex

Published on

உயர்தர அலுமினியத்தின் முன்னணி உற்பத்தியாளரும், Hayleys குழுமத்தின் துணை நிறுவனமான Alumex PLC, அதன் மதிப்பு கூட்டப்பட்ட நன்மைகளை விரிவுபடுத்துவதற்கும், தொழில்துறையில் முன்னணி ஏற்றுமதியாளராக தனது நிலையை உறுதிப்படுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில், Alumex PLC உள்ளூர் மற்றும் உலகளாவிய சந்தையை தொடர்ச்சியான புத்தாக்கங்களுடன் தனதாக்கிக் கொள்ளும்.

உற்பத்தியாளர் இப்போது உள்ளூர் சந்தைக்கு புத்தாக்கமான புதிய DIY (Do it yourself) தயாரிப்புகளை அறிமுகப்படுத்துகிறார். புதிய வரம்பு, பரந்த அளவிலான தயாரிப்புகளை உள்ளடக்கியது, சந்தை தேவைகளை பூர்த்தி செய்யும் மற்றும் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு தனித்துவமான புத்தாக்கமான தீர்வுகளை வழங்கும்.

சபுகஸ்கந்தையில் உள்ள அதிநவீன அலுமினியம் உருக்கும் ஆலையில் முதலீடு செய்த பிறகு, Alumex அதன் குறைந்த கார்பன் அலுமினிய வரம்பான Ozon மற்றும் Re_AI ஆகியவற்றை அறிமுகப்படுத்துவதன் மூலம் கட்டுமானத் துறையில் நிலையான புத்தாக்கங்களை மேலும் ஊக்குவிக்கிறது.

“கடந்த இரண்டு வருடங்கள் நம் அனைவருக்கும் சவாலானவை. எவ்வாறாயினும், சவால்களை சமாளிக்கக் கூடிய திறன் எங்களின் ஏற்றுமதியை விரிவுபடுத்தவும், அதிக ஏற்றுமதி வருவாயை உருவாக்கவும் மற்றும் எங்கள் தொழில் பங்குதாரர்களைக் கவனித்துக்கொள்ளவும் உதவுகிறது, இது எங்களது முக்கிய தூரநோக்கு பார்வையாகும்.”

எங்கள் தூரநோக்கு பார்வையை உணர்ந்து, உற்பத்தியாளர்கள், கைவினைஞர்கள், மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு எங்கள் தூரநோக்கு பார்வைக்கு ஆதரவளிக்கும் மற்றும் ஆக்கப்பூர்வமான திறன்களை வளர்த்துக் கொள்ளக்கூடிய தொழில் வல்லுநர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக, ஏற்றுமதி வருவாயை அதிகரிக்க புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் போது,​​எங்கள் பயிற்சி அமர்வுகளை நாங்கள் தொடர்ந்து நடத்தி வருகிறோம். என Alumex முகாமைத்துவ பணிப்பாளர் பிரமுக் தெதிவெல தெரிவித்தார்.

Alumex இலங்கையில் ஏற்றுமதி விருதுகள் உட்பட பல்வேறு மதிப்புமிக்க தளங்கள் மற்றும் வணிகங்களில் இருந்து பல விருதுகளை வென்றுள்ளது. அவற்றில், 2022 NCE விருது வழங்கும் நிகழ்வில், ஏற்றுமதி அலுமினியம் உருக்கு முறைகளை அறிமுகப்படுத்தியதற்காக, இயந்திரங்கள் மற்றும் பொறியியல் உற்பத்தித் துறைக்கான தங்க விருதை வென்றமை குறிப்பிடத்தக்கது. மேலும், Alumex CNCI Achiever Award 2022 விருது வழங்கும் நிகழ்வில் முதல் 10 வெற்றியாளர்கள் மற்றும் தேசிய வணிக சிறப்பு விருதுகளில் உற்பத்தித் துறையில் முன்னணியில் இருப்பதன் மூலம் தொழில்துறையில் அதன் நற்பெயரை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

அதன் பங்குதாரர்களுக்கு வெளிப்படையான அறிக்கையிடலுக்கான நற்பெயரை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், Aluex ஆனது 2022 CA Sri Lankazs TAGS விருது வழங்கும் நிகழ்வில் சர்வதேச அங்கீகாரத்தை வென்றது மற்றும் 2021 Asia Integrated Reporting Awards பிரிவில் சிறந்த வருடாந்திர அறிக்கைக்கான தங்க விருதை வென்றது. ஒருங்கிணைந்த அறிக்கையிடல் விருதுகளில் 2022 CMA சிறந்து விளங்கும் முதல் 10 ஒருங்கிணைந்த அறிக்கையிடல் விருதுகளில் நிறுவனம் இடம் பெற்றது.

2022 இல் வென்ற விருதுகள் எங்கள் குழுவின் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கின்றன, மேலும் இது புதிய தரங்களைத் தொடர்ந்து அமைக்க பலப்படுத்துகிறது. என தெதிவெல தெரிவித்தார்.

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பில் வீழ்ச்சி

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2025 ஏப்ரல் மாதத்தில் 3% குறைவடைந்து 6.32 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளதாக...

மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக...

தங்கத்தினுடைய விலை உச்சம் தொட்டது

தங்கத்தினுடைய விலை இன்றைய தினம் (22) 5.16 சதவீத மிகப்பெரிய அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ்...