follow the truth

follow the truth

May, 12, 2025
Homeவணிகம்புதிய தங்கக் கடன் மத்திய நிலையத்தை நுரைச்சோலையில் திறக்கும் HNB FINANCE

புதிய தங்கக் கடன் மத்திய நிலையத்தை நுரைச்சோலையில் திறக்கும் HNB FINANCE

Published on

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC இன் 58வது தங்கக் கடன் மத்திய நிலையம் கற்பிட்டி நுரைச்சோலையில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் HNB FINANCE இன் முகாமைத்துவப் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவ உறுப்பினர்கள் உட்பட பெருமளவானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கற்பிட்டி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் தங்கக் கடன் சேவைகளுக்கான தற்போதைய தேவைக்கு ஒரு தீர்வாக, நிறுவனம் இந்த புதிய HNB FINANCE தங்கக் கடன் மத்திய நிலையத்தை அமைத்துள்ளது. வாடிக்கையாளர் தேவைகளை துல்லியமாக கண்டறிந்து நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட Gold Loan, Gold Plan மற்றும் VIP Gold Loan சேவைகள், நிதி நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சிறந்த தங்கக் கடன் தீர்வுகள் என்று சந்தேகத்திற்கு இடமின்றி கூறலாம்.

HNB FINANCE Gold Loan சேவையானது மூன்று நிமிடங்களில் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் ஒரு பவுன் தங்கத்திற்கான அதிக முன்பணத் தொகையைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்த புதிய தங்கக் கடன் சேவைப் பிரிவு, சேவைக் கட்டணங்கள் அல்லது பிற மறைமுகக் கட்டணங்கள் எதுவுமின்றி, அவர்கள் செல்லும் வழியில் பணம் செலுத்தும் திறனுடன் நம்பகமான பரிவர்த்தனையைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தீர்வாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

“நுரைச்சோலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்களுக்கு மிகவும் நம்பகமான தங்கக் கடன் சேவையை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம், மேலும் இந்த புத்தம் புதிய தங்கக் கடன் மத்திய நிலையத்தின் மூலம் HNB FINANCE இன் பிற நிதிச் சேவைகளை அப்பகுதி மக்களுக்கு கொண்டு சேர்ப்பது எங்கள் ஒரே விருப்பமாகும். மேலும், ஒவ்வொரு வாடிக்கையாளரின் தேவைகளையும் துல்லியமாகக் கண்டறிந்து அவர்களுக்குத் தனித்த தங்கக் கடன் சேவையை வழங்குவது எங்கள் எதிர்ப்பார்ப்பாகும்.” என HNB FINANCE இன் தங்கக் கடன் சேவைகளின் தலைமை அதிகாரி லக்ஷ்மன் ரணசிங்க தெரிவித்தார்

HNB FINANCE தங்கக் கடன் சேவையின் கீழ் செயல்படும் Gold Loan Plan சேவையானது தங்கக் கடன் துறையில் ஒரு புரட்சிகரமான சேவையாகும், மேலும் HNB FINANCE வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வாங்கப்படும் தங்க ஆபரணங்களுக்கு கடன் தொகையை வழங்குகிறது.

இந்த கடன் தொகையை சமமான மாதாந்திர தவணைகளில் செலுத்துவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது. இந்த முதலீட்டுத் திட்டம், டொலருக்கு நிகரான தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால், நுகர்வோரின் தங்க கையிருப்பை அதிகரிக்கவும், அவர்களின் பிள்ளைகளுக்கு தங்கம் வாங்கவும் பயன்படும் சிறந்த நடவடிக்கை என்று சொல்லலாம்.

மேலும், HNB FINANCE அறிமுகப்படுத்திய VIP Gold Loan தங்கக் கடன் சேவையானது வணிக மற்றும் தனிப்பட்ட நிதித் தேவைகளுக்கு மிகவும் உகந்த நிதித் தீர்வாகக் கூறலாம் மற்றும் வாடிக்கையாளர்களின் தங்கப் பொருட்களுக்கான அதிகபட்ச முன்பணத் தொகையை மிக விரைவாக வழங்கவும் நிறுவனம் செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பில் வீழ்ச்சி

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2025 ஏப்ரல் மாதத்தில் 3% குறைவடைந்து 6.32 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளதாக...

மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக...

தங்கத்தினுடைய விலை உச்சம் தொட்டது

தங்கத்தினுடைய விலை இன்றைய தினம் (22) 5.16 சதவீத மிகப்பெரிய அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ்...