follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுகோட்டாபய அரசு கொண்டு வந்த தரக்குறைவான உரங்கள் தொடர்பில் எப்போது நடவடிக்கை எடுப்பீர்?

கோட்டாபய அரசு கொண்டு வந்த தரக்குறைவான உரங்கள் தொடர்பில் எப்போது நடவடிக்கை எடுப்பீர்?

Published on

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரங்களுக்கு 6.9 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாகவும், இது இலங்கை நாணயத்தில் 1382 மில்லியன் ரூபாவாகும் என்றும், குறித்த ஒப்பந்தத்தின் பிரகாரம் வழங்கப்பட்ட தரக்குறைவான உரத்துக்கான இழப்பீடாக பணத்தை மீளப்பெற முடியாது போயுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கணக்காய்வு அறிக்கையின் பிரகாரம் , இராஜாங்க மற்றும் அமைச்சரவை அமைச்சின் பொறுப்பு வாய்ந்த நபர்களது பொறுப்பின் அலட்சியத்தால் இந்தப் பணத்தைப் பெற முடியாதுபோனதாகவும், எனவே இப்போதாவது கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் பிரகாரம் எப்போது நடவடிக்கை எடுப்பீர்கள் என விவசாய அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர், நானோ நைட்ரஜன் உர கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையும் நிறைவு செய்யப்பட்டுள்ளதால் அதை சபையில் சமர்ப்பிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

நெல் கொள்வனவிற்காக ஒரு கிலோ நெல்லுக்கு 100 ரூபா உத்தரவாத விலை தருவதாக ஜனாதிபதி கூறிய போதிலும் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு விலைகள் நிர்ணயிக்கப்படுவதாகவும், இந்நிலையில், இப்போகத்தில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என விவசாய அமைச்சரிடம் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...