follow the truth

follow the truth

July, 12, 2025
Homeஉள்நாடுசிறுவர் துஷ்பிரயோகம் செய்த மாகல் கந்தே தேரர்.

சிறுவர் துஷ்பிரயோகம் செய்த மாகல் கந்தே தேரர்.

Published on

மாகல்கந்தே சுதந்த தேரர் இந்த நாட்டின் பிரதான சில ஊடகங்கள் மூலமாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவர்.

இந்த நாட்டில் உள்ள அரசியல் காரணிகள் மற்றும், தனிப்பட்ட நபர்களின் காரணிகள் குறித்து ஊடகங்களில் பேசி அது தொடர்பாக மக்களால் அங்கீகரிக்கப்பட்ட (பெரும்பான்மை மக்களால்) ஒருவராக இருந்தார்.

ஆனாலும் அண்மையில் ஜப்பானில் பதிவு செய்யப்பட்ட ஒரு காணொளியில் இந்த தேரர் இடம்பெற்ற காரணத்தால் நாட்டுக்குள் அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிறுவர் துஷ்பிரயோகம் என்று அடையாளப்படுத்தப்படும் இந்த வீடியோ குறித்து மாகல்கந்தே தேரர் இதுவரை எந்த உத்தியோகபூர்வ தகவல்களையோ அல்லது எதிர்ப்புகளையோ வெளியிடவில்லை. ஆனால் தேரருக்கு சார்பான சிலரோ இது வேண்டும் என்று தேரருக்கு சேறு பூசுகின்ற விடயம் குறிப்பிட்டும் வருகின்றனர்.

மாகல்கந்தே சுதந்த தேரர் என்பவர் யார்?

இவர் தொடர்பான மேலதிக தகவல்களை தேடுவது என்பது மிகவும் கடினமாக விடயம் என்றாலும் பேருவளை மாகல்கந்தே பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்டவர்.

அங்கிருந்துதான் அவர் ஞானம் பெற்று தேரரானார் என்று கூறப்படுவதோடு அதற்கு முன்னர் கிராம பாதுகாப்பு உத்தியோகத்தராக அவர் செயற்பட்டார் என்றும் சில ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.

சாரதி பொலிஸ் உத்தியோகத்தராக செயட்பட்டாரா?

மாகல்கந்தே தேரராவதற்கு முன்னர் சாரதியாகவே செயட்பட்டு வந்துள்ளார். “ஹடிகள்ளே தேரர்” என்று அழைக்கப்படும் தேரரின் சாரதியாகவே அவர் செயற்பட்டு வந்துள்ளார். 2008 – 2009 ஆம் ஆண்டு வரைக்கும் சுமார் 1 வருடத்துக்கும் குறைவான காலப்பகுதி அளவே அவர் இவ்வாறு சாரதியாக செயற்பட்டுள்ளார்.

அதற்கு முன்னர் அவர் இலங்கை பொலிஸில் சேவையாற்றி வந்துள்ளதாக “ஹடிகள்ளே தேரர்” கூறியுள்ளார். ஆனால் மாகல்கந்தே தேரர் தன்னுடைய அறிவுரைப்படியோ அல்லது வழிகாட்டல் படியோ தேரராகவில்லை என்றும் குறித்த தேரர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் மாகல்கந்தே சுதந்த தேரர் பேருவளை தெனிய என்ற பகுதியில் உள்ள ஒரு விகாரையில் வைத்தே தேரராக மாறியுள்ளார். தற்பொழுதும் களுத்துறை தெற்கு பகுதியில் உள்ள விகாரையில் சேவையாற்றி வருவதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அவரின் அரசியல் பிரவேசம் அல்லது ஆதரவு.

மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு விடுதலை கொடுக்க வேண்டும் என்று ஒரு மக்கள் கருத்தை உருவாக்க அவர் ஊடகங்கள் மூலம் முயட்சித்ததன் காரணமாகவே அவர் மக்கள் மத்தியில் பேசுபொருளானார்.
அவர் சிங்கள ராவய என்ற அமைப்பின் மூலம் இயங்கி வந்தாலும் 2021 ஆம் ஆண்டு அவர் அதில் இருந்து விரட்டப்பட்டுள்ளார். ஆனால் அதன் பின்னர் அதே பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கு ஊடகங்கள் முன்னாள் தோன்றினார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தை அவமதித்துள்ளார் என்று கூறி நீதிமன்றத்தில் மாகல்கந்தே தேரர் வழக்கொன்றையும் தாக்கல் செய்தார். ரஞ்சன் ராமநாயக்க சிறைக்கு செல்ல காரணமாக நபர்களில் இவரும் ஒருவர் என்று கூறப்படுகின்றது.

தேசிய ஊடகம் ஒன்றில் புர்கா அணிதல்.

உயிர்த்த ஞாயிரு தாக்குதலுக்கு பின்னர் இலங்கையில் புர்காவை தடை செய்ய பாடுபட்டவர்களில் மாகல்கந்தே தேரர் பிரதான நபர் ஆவார்.

ஒரு அமைப்பின் மூலம் செய்தியாளர் சந்திப்புக்கு வந்த அவர் இஸ்லாமிய பெண்கள் அணியும் புர்காவை அணிந்து காட்டி கேளிக்கையாக பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்படி உருவான மாகல்கந்தே சுதந்த தேரர் ஜப்பானில் சிறுவர் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் மாட்டிக்கொண்டுள்ளார். அது தொடர்பான ஒரு வீடியோ வைரலாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...