follow the truth

follow the truth

July, 17, 2025
HomeTOP1அரச செலவினங்களைக் கட்டுப்படுத்த புதிய நடைமுறை

அரச செலவினங்களைக் கட்டுப்படுத்த புதிய நடைமுறை

Published on

அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் புதிய அரசாங்க வருமானத்தை ஈட்டுவதற்கும் முறையான வழிமுறைகள் உடனடியாக அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

நாட்டை கட்டியெழுப்புவதற்கு நிதி ஒழுக்கம் இன்றியமையாதது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாவிற்கும் அதிகபட்ச பெறுமதி பெறப்பட வேண்டும் எனவும், ஆனால் அது பெரும்பாலும் அரசாங்க செலவீனத்தில் இடம்பெறுவதில்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுமக்களின் வருமானத்தை மறந்துவிடுவது மாத்திரமன்றி, எந்தவொரு பயனும் இல்லாத செயற்பாடுகளுக்காக பொதுமக்களின் பணத்தை வரம்பற்ற முறையில் செலவிடுவதே இந்த நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

புதிய அரச வருமானத்தை உருவாக்குவதற்கான உத்திகளை கண்டறிய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை ஜனாதிபதி அலுவலகத்தில் கையளிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கஹவத்தை கொலை சம்பவம் – சந்தேகநபர்கள் இருவருக்கு விளக்கமறியல்

கஹவத்தையில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 28ஆம்...

500 சிறு தேயிலை உற்பத்தி கிராமங்கள் உருவாக்கப்படும்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் 500 சிறு தேயிலை உற்பத்தி கிராமங்கள் உருவாக்கப்படும் எனவும் தேயிலையின் தரத்தை...

புதிய கல்வி சீர்திருத்தத்தில் அழகியல், வரலாறு ஆகிய பாடங்கள் நீக்கப்படவில்லை

“புதிய கல்வி சீர்திருத்தத்தில் அழகியல் மற்றும் வரலாறு ஆகிய பாடங்கள் நீக்கப்படவில்லை. நாம் அரசியல் செய்வோம், ஆனால் அதனை...