follow the truth

follow the truth

July, 22, 2025
Homeஉள்நாடுகள நிலவரத்தைப் புரிந்து கொண்டு கிழக்கு ஆளுநர் செயற்பட்டமை வரவேற்கத்தக்கது

கள நிலவரத்தைப் புரிந்து கொண்டு கிழக்கு ஆளுநர் செயற்பட்டமை வரவேற்கத்தக்கது

Published on

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இனவாதிகளின் கைப்பொம்மையாக மாறாமல் கள நிலவரத்தைப் புரிந்து கொண்டு செயற்பட நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது என நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

களநிலவரத்தை அறிந்து கொள்ளாமல் கிழக்கு மாகாண ஆளுநர் சில பாரபட்சமானதும் அந்தஸ்துக்குத் தகுதியற்றதுமான சில நடவடிக்கைகளை கிழக்கு மாகாண ஆளுநர் சமீப சில நாட்களாக மேற்கொண்டு வந்திருந்தது விமர்சனத்திற்குள்ளாகியிருந்தது.

ஆளுநரின் சில நடவடிக்கைகள் பற்றி மக்களிடம் நிலவிய அதிருப்தியான கருத்துக்கள் தொடர்பாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய சுற்றாடல்துறை அமைச்சருமான நஸீர் அஹமட் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரஸ்தாபித்திருந்தார். அத்துடன் ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு சென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து சமூக ஆர்வலர்களும் பொது அமைப்புக்களும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த விடயத்தில் அக்கறை கொள்ளத்துவங்கினர். அதன் பயனாக இப்பொழுது கிழக்கு மாகாண ஆளுநர் விழிப்படைந்து தனது போக்கை மாற்றி கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக முஸ்லிம் ஒருவரை நியமித்தது வரவேற்கத்தக்கது என்று அவதானிப்பாளர்கள் கருதுகின்றனர்.

முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் வாழ்கின்றார்கள். இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு அமைதிக்குப் பங்கம் விளைவிக்காத வகையில் ஆளுநர் நடவடிக்கை மேற்கொள்ளத் தலைப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடந்த காலங்களில் மட்டக்களப்பு மருத்துவமனைதான் அதிக குறைபாடுகளைக் கொண்ட மருத்துவமனை

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான மருத்துவமனையான மட்டக்களப்பு போதனா மருத்துவமனையை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ...

கடந்த 3 ஆண்டுகளில் நாட்டைவிட்டு வெளியேறிய 1,489 வைத்தியர்கள்

2022 முதல் 2024 வரையிலான மூன்று ஆண்டுகளில், நிபுணர்கள் உட்பட 1,489 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியதாகவும், இதனால்...

சீதுவையில் துப்பாக்கிச் சூடு

சீதுவை, ராஜபக்ஷபுர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தின் பின்னர் துப்பாக்கிச் சூடு...