follow the truth

follow the truth

July, 26, 2025
Homeஉள்நாடுசமுர்த்தி - இலங்கை சமூகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு முக்கியமான திட்டம்

சமுர்த்தி – இலங்கை சமூகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு முக்கியமான திட்டம்

Published on

சமுர்த்தி வேலைத்திடமானது 17 இலட்சம் குடும்பங்கள் நேரடியாகவும் 40 இலட்சம் குடும்பங்களை வாடிக்கையாளர்களாகவும் கொண்ட இலங்கை சமூகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு முக்கியமான திட்டமாகும் என்றும், இதில் மிகச் சிறந்த அம்சங்களும் சிறிய குறைபாடுகளும் உள்ளதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பொதுஜன சமுர்த்தி தொழிற்ச் சங்கம் மற்றும் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(27) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சமுர்த்தி வேலைத்திட்டம் தொடர்பில் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமல் எவ்வித விஞ்ஞானபூர்வமான ஆய்வுகளும் இன்றி தரவுகளை மையப்படுத்தாத முறைகளின் ஊடாக இந்த அஸ்வெசும தீர்மானம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், வறுமையில் வாடும் மக்களுக்கு வழங்குவதற்காக வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட நிதியுதவியை எப்படியோ 20 இலட்சம் குடும்பங்களுக்கு வழங்குவதற்கு பொய்யான கணக்கெடுப்பு மூலம் அஸ்வெசும எனும் பெயரில் இது அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தாம் நாட்டின் ஜனாதிபதியாக இருந்தால், கோவிட் சூழ்நிலைக்குப் பிறகு நாட்டிலுள்ள ஒரு குடும்ப அலகின் சமூக-பொருளாதார வருமானச் செலவினக் கணக்கெடுப்பை நடத்துவதுதான் இங்கு முதலில் செய்யப்பட்டிருக்கும் என்றும், வறுமைக் கோடு அடையாளம் காணப்பட்டு அதன் ஊடாக வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு உண்மையான வறியோர் அடையாளம் காணப்பட்டிருப்பர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஜூலை மாதத்தில் இதுவரை சமுர்த்தி மற்றும் அஸ்வெசும கொடுப்பணவு வழங்கப்படவில்லை என்றும், அனைத்து விவகாரங்களையும் குழப்பிக்கொண்டு தற்பபோது குடிசன கணக்கெடுப்பை நடத்த முயற்சிக்கின்றனர் என்றும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, Verite ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளதன் பிரகாரம், இலங்கையில் மின்சார பாவனையாளர்கள் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவின் அடிப்படையில் வறுமைக் கோட்டைத் துல்லியமாக அடையாளம் காண முடியும் என்றும்,இது 80 சதவீதத்திற்கும் மேலான வெற்றிகரமான விஞ்ஞானபூர்வ முறை என்றும்,இதன் மூலம் அஸ்வெசும நடைமுறைப்படுத்தப்படுத்தும் போது ஏற்படும் பெரும் நிர்வாகச் செலவுகளைக் குறைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே பல்வேறு தரப்பினர் விரும்புகின்றனர் என்பதற்காக சமுர்த்தி கொடுப்பணவை இல்லாதொழிக்க இடமளிக்கப்படமாட்டாது என்றும், இதில் சிக்கல்கள் இருந்தால், அவற்றை சரிசெய்ய வேண்டும் என்றும், தரவுகளின் அடிப்படையிலும் மனிதாபிமான அடிப்படையிலும் இந்த வேலைத்திட்டங்கள் விஞ்ஞான ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சமீபத்திய நாட்களில் 21 காட்டு யானைகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உள்ளன

கடந்த இரண்டு மாதங்களில் 21 காட்டு யானைகள் காயமடைந்து சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துணை அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி...

பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக பேச்சாளர் நியமனம்

பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக பணிப்பாளர் மற்றும் பேச்சாளராக பிரிகேடியர் பிரேங்க்ளின் ஜோசப், நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் இந்தப் பதவியில் இருந்த...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

மத்திய ,சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் எனவும்...