follow the truth

follow the truth

July, 31, 2025
HomeTOP2ஒன்லைன் மூலம் உலக சந்தையில் தேயிலை விற்பனை செய்யும் முறைமை ஆரம்பம்

ஒன்லைன் மூலம் உலக சந்தையில் தேயிலை விற்பனை செய்யும் முறைமை ஆரம்பம்

Published on

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய செப்டெம்பர் 02 ஆம் திகதி உலக தெங்கு தினத்தை முன்னிட்டு நாட்டின் இரண்டாவது தெங்கு முக்கோணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் தொழில்சாலைகள் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ,மன்னார் மற்றும் முல்லைத்தீவு உள்ளிட்ட மாவட்டங்களை மையப்படுத்தி வடக்கில் ஆரம்பிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் ரமேஷ் பத்திரன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்வருடத்தில் 290 மில்லியன் கிலோகிராம் தேயிலையை ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

இந்த ஆண்டு இறப்பர் சார்ந்த ஏற்றுமதி மூலம் 900 மில்லியன் டொலர்களும் தேங்காய் சார்ந்த ஏற்றுமதி மூலம் 700 மில்லியன் டொலர்களும் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இலங்கையில் கறுவா பயிர்ச்செய்கையை ஊக்குவிப்பதற்கும் கோப்பி பயிர்ச் செய்கையை மீள விரிவுபடுத்துவதற்கும் அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன,

உரத் தட்டுப்பாட்டினை போன்றே சீரற்ற காலநிலையும் பெருந்தோட்ட கைத்தொழிலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அதனால் 50 கிலோ யூரியாவின் விலை முப்பதாயிரம் ரூபாவாக அதிகரித்திருந்த நிலையில் தற்போது அதன் விலையை 9000 வரையில் மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த நிலைமையின் கீழ் வருட இறுதியில் முன்னூறு மில்லியன் கிலோகிராம் தேயிலையை ஏற்றுமதி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இவ்வருட இறுதிக்குள் 290 மில்லியன் கிலோ தேயிலையை ஏற்றுமதி செய்ய முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஒன்லைன் முறையில் உலக சந்தையில் தேயிலை விற்பனை செய்யும் முறைமை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஈரானிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட 500 மில்லியன் டொலர் பெறுமதியான எரிபொருளுக்கு பதிலீடாக தேயிலை ஏற்றுமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனால் எமக்கு கிடைக்காமல் போன ஈரான் தேயிலை சந்தை வாய்ப்பை மீண்டும் தொடர்ச்சியாக பெற்றுக்கொள்வதே எமது எதிர்பார்ப்பாகும்.
இலங்கையின் தேயிலை கொள்வனவாளர்களான பாகிஸ்தான், ரஸ்யா, யுக்ரேன், ஈரான், ஈராக் உள்ளிட்ட நாடுகளில் நிலவும் பிரச்சினை காரணமாக அவர்களின் தேயிலை கொள்முதல் திறன் குறைவடைந்து வருவதாகவும், இலங்கை தேயிலைக்கான விலை உலக சந்தையில் நிலையாக காணப்பட்டாலும் தேயிலை கொள்வனவு செய்யும் நாடுகளின் கொள்முதல் திறன் குறைவடைந்து வருகின்றமை சிக்கலாக உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உக்ரைன் இராணுவத்தைக் குறிவைத்த ரஷ்யா – ஏவுகணை தாக்குதலில் 3 பேர் பலி

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 3 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இன்னும் இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம்...

மீனவ சமூகத்திற்கான பாதுகாப்பு வலை – புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

உப்பு நீர் மற்றும் நன்னீரில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவ சமூகத்தினருக்கு வாழ்வாதாரமாக வேளாண்மை மற்றும் விவசாய காப்பீட்டு...

யாழ் சென்று சாட்சியமளிக்க தயார் – கோட்டாபய

2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன்...