விலைக் கட்டுப்பாட்டினால் ஒருபோதும் வியாபாரம் முன்னேற்றம் அடையப்போவதில்லை

403

“சிங்கள வியாபாரம் தெங்கு வியாபாரத்தின் ஊடாகவே ஆரம்பிக்கப்பட்டது. தெங்கு உற்பத்தி ஏக்கலையில் பிரசித்தம் பெற்றதாக காணப்பட்டது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

சிங்கள வியாபாரிகள் விவசாயத்தில் தேர்ந்தவர்களாக இருந்த போதும் மூலதனச் சரிவின் காரணமாக வீழ்ச்சியை கண்டனர். அதன் பின்னர் தென்னந்தோட்டம் 50 ஏக்கர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று (04) நடைபெற்ற தெங்கு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 29 ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எமக்கு பின்பு தெங்கு உற்பத்தியை ஆரம்பித்த நாடுகள் துரிதமாக முன்னேறி வருவதை காண முடிகிறது. குறிப்பாக பிரேஸில் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் ஹெக்டெயாருக்கு 8000 விளைச்சலை பெறுகின்றன. நாம் ஒரே இடத்தில் நிற்கும் போது அந்த நாடுகள் முன்னேற்றம் கண்டுள்ளன.

தெங்கு தொடர்பிலான மூன்று நிறுவனங்களையும் ஒன்றிணைக்குமாறு இங்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இருப்பினும் அவற்றில் இரு நிறுவனங்களை ஒன்றிணைத்து தெங்கு ஆராய்சி நிறுவனத்தை விவசாயப் பல்கலைக்கழகத்துடன் ஒன்றிணைப்பது பொருத்தமானதாக அமையும் என்பதே எனது நிலைப்பாடாகும்.

தற்போது அரசாங்கத்தினால் விவசாய நவீன மயப்படுத்தல் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விவசாயத்தின் ஊடாக மிகவும் போட்டித்தன்மை மிக்க பொருளாதாரத்தை உருவாக்குவதே எமது நோக்கமாகும். தெங்கு தொழிற்சாலைகளும் அதற்கு தயாராக வேண்டும். தெங்கு உற்பத்தியை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பில் நாம் ஆராய வேண்டும்.

அதேபோல் தெங்கு உற்பத்தியை முழுமையாக வர்த்தகச் சந்தையுடன் இணைக்க வேண்டும். விலைக் கட்டுப்பாட்டினால் ஒருபோதும் வியாபாரம் முன்னேற்றம் அடையப்போவதில்லை. உற்பத்தியை பெருக்கி தேங்காயின் பெறுமதியை அதிகரிப்பதன் ஊடாகவே தொழிற்சாலைகள் பலனடைய முடியும்.

இந்நாடு வங்குரோத்து நாடு, தற்போதைய அரசாங்கத்திற்கு பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டு முன்னேறிச் செல்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. கடன் நீடிப்பு முயற்சிகளை நாம் முன்னெடுத்து வருகிறோம். கடந்த காலங்களில் நாட்டிற்கு வருகைத் தந்த தலைவர்களுடனும் அது குறித்து கலந்துரையாடினோம்.

கடன் நீடிப்பின் பின்னரும் எமது கடன்களை மீளச் செலுத்தாமல் இருக்க முடியாது. கடன் மீள்செலுத்துகைக்கான காலத்தை நீடித்துக்கொள்வதை மாத்திரமே செய்ய முடியும்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here