நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வனஜீவராசிகள் மற்றும் வனப் பகுதிகளுக்குள் அனுமதியின்றி பிரவேசிப்பது தடைசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபொட தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த பகுதிகளில் மலையேறுவதற்கும் அங்கு முகாமிடுவதற்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய எதிர்காலத்தில், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு வனப்பகுதியை பார்வையிட விரும்பினால் விடயத்துடன் தொடர்புடைய அதிகாரிகளின் அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் அவ்வாறு பெறப்படுகின்ற அனுமதி பொலிஸாரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபொட தெரிவித்துள்ளார்.
மேலும் பயணத்தின் நிறைவிலும் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.