follow the truth

follow the truth

November, 1, 2024
HomeTOP1ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் முடிவுக்கு வந்துள்ளன - சரத் வீரசேகர

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் முடிவுக்கு வந்துள்ளன – சரத் வீரசேகர

Published on

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து விசாரணைகளும் தற்போது நிறைவடைந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் வீரசேகர தெரிவித்தார்.

மேற்படி விசாரணை தொடர்பில் பொலிஸாரின் சகல கடமைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

‘பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான அனைத்து விசாரணைகளையும் பொலிஸார் முடித்துள்ளதோடு, சட்டமா அதிபரிடம் அது ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி தாக்குதல்கள் தொடர்பாக ஐந்து உயர் நீதிமன்றங்களில் ஒன்பது வழக்குகள் தற்போது விசாரிக்கப்படுகின்றன,’ என்று அவர் கூறினார்.

சுமார் இரண்டரை வருடங்களில் மிகக் குறுகிய காலப்பகுதியில் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும் எனவே ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கமோ அல்லது பொலிஸாரோ உரிய விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என எவராலும் குற்றம் சுமத்த முடியாது எனவும் வீரசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

‘மிகக் குறுகிய காலத்தில் சுமார் 110,000 தொலைபேசி அழைப்புகளை நாங்கள் பகுப்பாய்வு செய்ய வேண்டியிருந்தது. மேலும், இந்தத் தாக்குதல்களைத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 24 தரப்பினர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுமார் 23,700 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

லொஹான் ரத்வத்தே விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த எதிர்வரும், 07ம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு நீதவான்...

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம்

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. மாதாந்த...

முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 37 ரூபா?

முட்டையின் அதிகபட்ச சில்லறை விலையை 37 ரூபாவாக பேணுவதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் மொத்த வியாபாரிகள் இணக்கம்...