follow the truth

follow the truth

August, 11, 2025
HomeTOP2மின் வெட்டு தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை

மின் வெட்டு தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை

Published on

நாட்டு மக்களின் அன்றாடத் தேவைகளைக் கருத்திற்கொண்டு நாடு முழுவதும் தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

காலநிலை மாற்றங்களால் நீர் மின் உற்பத்திக்கு ஏற்படும் தடைகளைக் கருத்திற்கொண்டு அடுத்த இரண்டு வருடங்களில், நாடு பூராகவும் தொடர்ச்சியான மின் விநியோகத்திற்குத் தேவையான மின் உற்பத்திக்கான மாற்று வழிமுறைகளைக் கையாள்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (08) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர,

இன்று காலை முதல் சமனலவெவ நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் விநியோகிக்க ஆரம்பித்துள்ளதுடன் சமனலவெவ நீர்த்தேக்கத்தின் உயர் கொள்ளளவுக்கு ஏற்ப, தொடர்ந்து வரும் நாட்களில் நீர் விநியோகிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இவ்வாறு மேலதிக நீரை விநியோகிப்பதன் மூலம் மின் உற்பத்தி பாதிக்கப்படுமாயின், தென் மாகாணத்தில் மாத்தறை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும், காலி மாவட்டத்தில் பகுதியளவிலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எனினும், தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதை உறுதிப்படுத்தும் நோக்கில், அத்தியாவசிய தேவையின் அடிப்படையில் தேவையான மின்சாரத்தை கொள்வனவு செய்யவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

மின்வெட்டு மீண்டும் அமுல்படுத்தப்படுமாயின், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் கைத்தொழில்கள் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதுடன், குறிப்பாக வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுவது மாத்திரமன்றி மக்களின் இயல்பு வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிடும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பொதுமக்கள் மின்சாரத்திற்குப் பதிலாக மாற்று வழிமுறையாக, எரிபொருள்களில் இயங்கும் மின்பிறப்பாக்கிகளை பயன்படுத்த ஆரம்பிப்பார்களாயின், நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படுவதுடன், மீண்டும் எரிபொருள் வரிசைகள் ஏற்படும் அச்சம் நிலவுவதாகவும் தெரிவித்தார்.

எனவே, ஒரு நெருக்கடியில் இருந்து இன்னும் பல நெருக்கடிகளை உருவாக்குவதற்குப் பதிலாக, முதல் நெருக்கடிக்குத் தீர்வாக இயலுமான கொள்ளளவு நீரைவிடுவிக்கவும், இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது நெருக்கடிகள் ஏற்படாது, தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்த அவசியமான மாற்று வழிகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மின் வெட்டு தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை என்றும், இது குறித்து மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...