அண்மையில் மருத்துவச் சம்பவங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு தனது அறிக்கையை சுகாதார அமைச்சிடம் ஒப்படைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ட்வீட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.
வைத்தியர் – நோயாளியின் இரகசியத்தன்மை காரணமாக முழுமையான அறிக்கை வெளியிடப்படாது என குறிப்பிட்ட அமைச்சர், முடிவுகள் மற்றும் பரிந்துரைகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாக தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.