நாட்டில் 3000-இற்கும் மேற்பட்ட வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் இதில், 600-க்கும் அதிக விசேட வைத்திய நிபுணர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
விசேட வைத்திய நிபுணர்களுக்கான பற்றாக்குறையால் சில வைத்தியசாலைகளின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த ஆண்டு இறுதிக்குள் 2000 வைத்தியர்கள் வைத்திய சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, தாதியர் சேவையில் 30,000-இற்கும் அதிகமான வெற்றிடங்கள் நிலவுவதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் S.C.மெதவத்த தெரிவித்தார்.
தாதியர்களை பயிற்சியில் இணைத்துக்கொள்வதில் நிலவும் தாமதத்தினால் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தாதியர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தாதியர் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பினை துரிதப்படுத்துமாறு சுகாதார அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.