நாட்டில் நிலவும் குடிநீரின் தேவையை அத்தியாவசிய அவசர நிலையாக கருதுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நீர் வழங்கல், நீர்ப்பாசனம், அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கள் இணைந்து ஒன்றிணைந்த விரைவான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.