follow the truth

follow the truth

May, 19, 2024
Homeவணிகம்இலங்கை தேயிலை தோட்ட சுற்றுலா திட்டத்தை மேம்படுத்த ஹெய்லிஸ் பெரும்தோட்டம் The Pekoe Trail உடன்...

இலங்கை தேயிலை தோட்ட சுற்றுலா திட்டத்தை மேம்படுத்த ஹெய்லிஸ் பெரும்தோட்டம் The Pekoe Trail உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Published on

இலங்கையின் பாரிய மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட ஹெய்லிஸ் குழுமத்தின் முக்கிய நிறுவனங்களின் ஒன்றான ஹெய்லிஸ் பெருந்தோட்ட நிறுவனமானது நாட்டின் சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில் அதன் தொலைநோக்கு திட்டத்தை முன்னெடுக்க “The Pekoe Trail” உடன் கைகோர்த்துள்ளது.

ஹெய்லிஸ் பெருந்தோட்ட நிறுவனத்தின் பிரதான பிரதேச பெருந்தோட்ட நிறுவனங்கள் (RPCs) மூன்றான களனிவெலி பெருந்தோட்ட நிறுவனம் (KVPL), தலவாக்கலை பெருந்தோட்ட நிறுவனம் (TTEL) மற்றும் ஹொரனை பெருந்தோட்ட நிறுவனம் (HPL) ஆகியன இலங்கையின் மொத்த தேயிலை உற்பத்திக்கு 4.6% பங்களிப்பை வழங்குகின்றது. 44 தேயிலை தோட்டங்களினூடாக தொடரும் The Pekoe பாதை, எழில் கொஞ்சும் மலை நாட்டிலுள்ள ஹெய்லிஸ் தோட்டத்தின் 6 சிறந்த தேயிலை தோட்டங்களின் வழியாக செல்கிறது.

“அனைவருக்கும் நிலையான மதிப்பை உருவாக்கும் அதேவேளையில், இத்திட்டத்தின் மூலம் எமது தேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக பங்களிப்பதே எமது கூட்டு நோக்கமாகும். சிலோன் தேயிலையின் எதிர்காலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அனைத்து பங்குதார்களின் நல்வாழ்வுக்கும் முன்னுரிமை அளிக்கும் புதுமையான மற்றும் ஆக்கபூர்வமான நிலையான வளர்ச்சிக் கருத்துக்கள் மற்றும் செயல்களில் உள்ளது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை கலாச்சார அனுபவத்தை வழங்குவதுடன் நிலையான தேயில தோட்ட சுற்றுலா திட்டத்தின் மூலம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பகிரப்பட்ட நன்மைகளை வளர்ப்பதே எமது நோக்கமாகும்” என ஹெய்லிஸ் தோட்டங்களின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி ரொஷான் ராஜதுறை குறிப்பிட்டார்.

இலங்கைத் தேயிலையானது உலகின் சிறந்த தேயிலை என்ற நன்மதிப்பையும், பெருமைமிகு வரலாறையும் தன்வசம் கொண்டுள்ளது. இந்த தேயிலை சுற்றுலாவில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் எமது தேயிலைத் துறை தொடர்பாக அறிந்துகொள்ளவும், நிலையான மற்றும் புத்தாக்க அனுபவத்தை பெற்று மகிழ்வதற்கான சூழலும் கிடைக்கும். The Pekoe Trail இன் நிலைத்தன்மையை கேந்திரப்படுத்தி இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அத்துடன் கலாசார மற்றும் நிலைத்தன்மையை அனுபவிக்கும் வகையிலும் முன்செல்கின்றது. 22 தேயிலை பிரிவுகள் மூலம் 300 கிலோமீற்றர் தூரத்தை உள்ளடக்கும் வகையில் அமைந்துள்ளதை சுற்றுலாப் பயணிகளால் கண்டுகளிக்க முடியும். ஒவ்வொரு சுற்றுலா பயணியின் கார்பன் தடயத்தை குறைக்க ஹேய்லிஸ் பெருந்தோட்ட நிறுவனமானது “Slow Tourism” தத்துவத்தை ஏற்றுக்கொள்கின்றது.

இந்த மனம்கவர் சுற்றுலா அனுபவத்தில், பயணிகள் கொழுந்து பறிப்பவர்களுடன் சேர்ந்து கொழுந்து பறிக்கவும், அனுபவம் வாய்;ந்த தேயிலை தோட்டக்காரரின் விளக்கத்தின் கீழ் தொழிற்சாலையைப் பார்வையிடவும், பல்வேறு வகையான தேநீரை ருசி பார்க்கும் அனுபவத்தையும் பெற முடியும். அத்துடன் தேயிலை கொழுந்து முதல் தேநீர் கோப்பை வரையான அனைத்து செயற்பாடுகளையும் அவர்களால் பார்வையிட்டு புரிந்துகொள்ள முடியும். பசுமையான தேயிலை தோட்டம் ஊடாக சிறந்த தரத்திலான தேநீர் கோப்பையை பருக சந்தர்ப்பம் கிடைக்கும். அத்துடன் சுற்றுலாவின் இடைநடுவில் சுற்றுலாப் பயணிகளுக்கு சொகுசான தேயிலை பங்களாக்கள் மற்றும் சிறந்த கபானாக்கள் வரை தேர்ந்தெடுத்து தங்குவதற்கான அழகிய ரம்மியமான இடங்களும் உள்ளன.

“இந்த வரலாற்று தேயிலை பாதைகள் வழியாக சுற்றுலா பயணிகள் குறைவாக செல்லும் பிரதேசங்களுக்கு, Pekoe Trail ஊடாக ஊக்குவித்து அவர்களை வரவழைப்பதன் மூலம் அந்த பிராந்திய மக்களுக்கு பொருளாதார நலங்களையும், அனுகூலங்களையும் உருவாக்கி கொடுக்கலாம்” என ரொஷான் ராஜதுறை மேலும் குறிப்பிட்டார்.

“The Pekoe Trail மற்றும் ஹேலீஸ் பெருந்தோட்ட நிறுவனத்துக்கு இடையில் ஏற்பட்ட இந்த கூட்டாண்மையானது, இலங்கையின் சுற்றுலாத்துறைக்கும், அதன் வியாபார மேம்பாட்டுக்கும் மட்டுமன்றி, இலங்கையில் 150 வருடங்கள் பழமையான பெருந்தோட்ட துறையின் நிலையான அபிவிருத்திற்கு ஒத்துழைப்பு வழங்க சந்தர்ப்பம் கிடைக்கின்றது என ஐரோப்பிய ஒன்றியம் ஊடாக நிதியுதவி பெற்றும், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவர் பிரதிநிதிகளின் மேலதிக ஒத்துழைப்பை பெற்றும்” The Pekoe Trail சுற்றுலா செயற்திட்டத்திற்கு பங்களிப்பு வழங்கும் என சுற்றுலா மேம்பாட்டு பிரிவின் திட்ட பணிப்பாளர் ஷெயான் ராமநாயக்க தெரிவித்தார்.

ஹெய்லிஸ் பிளான்டேஷன்ஸ், அதன் வணிகம், செயல்முறைகள் ஆகியவற்றின் ஒவ்வொரு அம்சத்திலும் நெறிமுறை நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதைத் தொடர்ந்து அதன் தோட்ட சமூகங்களின் மேலும் வளர்ச்சிக்காக, மக்கள் மற்றும் சுற்றுச்சூழலின் நன்மைக்ககாக “Circular Economy Model” லை விரிவுபடுத்த உறுதிபூண்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

சுற்றுலாப் பயணிகளுக்கு ‘தேநீர் பரிசு’

இலங்கைக்கு வரும் ஒவ்வொரு வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்கும் விமான நிலையத்தில் இலங்கை தேயிலை நினைவுப் பரிசை வழங்குவதற்கு ஏற்பாடு...

22ஆவது DSI சுப்பர்ஸ்போர்ட் பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட DSI

கொழும்பு 02 நிப்போன் ஹோட்டலில் மே 07ஆம் திகதி நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இலங்கை யின் கரப்பந்தாட்ட வரலாற்றில்...

இலங்கையின் ஆக்கப்பூர்வமான தொடர்பாடல் துறையை மாற்றியமைக்கும் வகையில் Four A’s Advertising Festival

இலங்கையின் ஆக்கப்பூர்வமான தொடர்பாடல் துறையை மாற்றியமைக்கும் வகையில் Four A's Advertising Festival அமைக்கப்பட்டுள்ளது. கொழும்பு, இலங்கை, ஏப்ரல் 26,...