follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉள்நாடுதலைமறைவாகியுள்ள பொலிஸ் கான்ஸ்டபிளை கண்டால் உடன் அறிவிக்கவும்

தலைமறைவாகியுள்ள பொலிஸ் கான்ஸ்டபிளை கண்டால் உடன் அறிவிக்கவும்

Published on

குற்றப்புலனாய்வு திணைக்கள வளாகத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட ஹரக் கட்டாவை கழிவறைக்கு அழைத்துச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் தற்போது காணாமல் போயுள்ளார்.

காணாமல் போன பொலிஸ் கான்ஸ்டபிளின் புகைப்படம் தற்போது பொலிஸ் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, கீழே உள்ள புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ள பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு 071-85917774 அல்லது 0718594929 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறது.

கழிவறைக்கு சென்ற “ஹரக்கட்டா” தனது கைகளுக்கு கைவிலங்கு போடப்பட்டுள்ளது போன்று நடித்தவாறு வௌியே வந்தார்.

அப்போது, ​​ “ஹரக்கட்டா” தனது பாதுகாப்பிற்கு இருந்த STF அதிகாரியின் துப்பாக்கியை திடீரென பறிக்க முயன்றுள்ளார்.

பின்னர், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பின் போது, ​​”ஹரக்கட்டா” தனது கைவிலங்குகளை STF அதிகாரிக்கு போட முயன்றுள்ளார்.

சம்பவத்தின் போது, ​​குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் அவ்விடத்திலிருந்து ஓடி 4வது மாடிக்கு சென்று, ​​தனது கைத்தொலைபேசிக்கு பதிலாக, வேறொரு பொலிஸ் கான்ஸ்டபிளின் கைத்தொலைபேசியை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

மேல் தளத்தில் இருந்து STF அதிகாரியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்ற அதிகாரிகள் “ஹரக் கட்டாவை” மடக்கிப் பிடித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...