ஜனாதிபதி தனது கியூபா மற்றும் அமெரிக்க விஜயத்தை ஆரம்பித்தார்

231

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கியூபா மற்றும் அமெரிக்காவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்வதற்காக இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார்.

கியூபாவின் ஹவானாவில் 15ம் திகதி முதல் 16ம் திகதி வரை நடைபெறும் ஜி-77 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் அவர் முதலில் பங்கேற்க உள்ளார்.

அதன்பின், 19ம் திகதி முதல் 21ம் திகதி வரை அமெரிக்காவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78வது ஆண்டு அமர்வின் அரச தலைவர்கள் மாநாட்டில் உரையாற்ற உள்ளார்.

இதற்காக அவர் ஒரு குழுவினருடன் சென்றதுடன், அவர்கள் இன்று அதிகாலை 03.15 மணியளவில் எமிரேட்ஸ் விமானமான EK-649 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து டுபாய்க்கு புறப்பட்டுள்ளனர்.

துபாயில் இருந்து அவரும் அவரது குழுவினரும் மற்றொரு விமானத்தில் அமெரிக்கா செல்ல உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here