வத்தளை, கெரவலப்பிட்டி குப்பை மேடு கழிவு முகாமைத்துவ பூங்காவாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கமைய, கழிவு முகாமைத்துவத்தின் ஊடாக தூய்மையான சூழலைப் பேணுவதற்காக, இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தினால் இந்த பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.
கழிவுகளைப் பயன்படுத்தி இயற்கை உரம் தயாரிப்பதுடன், எரி எண்ணெய் உற்பத்தி, முதன்மை கரி உற்பத்தி மற்றும் பிற புதுமையான பொருட்களை உற்பத்தி செய்து இந்த பூங்கா உருவாக்கப்பட உள்ளதாக இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
மேலும், கெரவலப்பிட்டி குப்பை மேட்டில் மக்குகின்ற குப்பைகளைப் பயன்படுத்துவதன் மூலம் நாளொன்றுக்கு சுமார் 20 மெற்றிக் தொன் குப்பைகள் இயற்கை உரம் உற்பத்தி செய்யப்பட்டு சில்லறை சந்தைக்கு விடப்படுகிறது.
கெரவலபிட்டி குப்பை மேட்டில் சுமார் 1500 தொன் இயற்கை உரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.