பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மீண்டும் வர்த்தமானியில்

186

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மீண்டும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் கடந்த சனிக்கிழமை வர்த்தமானியில் வெளியிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக, இந்த ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் திகதி, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் முதல் வாசிப்பின் பின்னர் அதற்கு எதிராக ஆட்சேபனைகள் இருப்பின் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்ய முடியும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here