சகல பொலிஸாரும் மனசாட்சியுடனும் உண்மைத்தன்மையுடனும் வேலை செய்வதையே தான் எதிர்பார்ப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு போதைக்கு எதிராகவும் திட்டமிட்ட குற்றச் செயல்களுக்கு எதிராக பொலிஸார் மேலும் பொறுப்போடு செயட்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பொல்பிதிகம பொலிஸ் நிலைய கட்டடமொன்றை திறந்துவைக்கும் நிகழ்வில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.