follow the truth

follow the truth

September, 17, 2024
HomeTOP2உண்மையைக் கண்டறிவதில் அரசாங்கம் ஏன் அக்கறை காட்டுவதாக இல்லை

உண்மையைக் கண்டறிவதில் அரசாங்கம் ஏன் அக்கறை காட்டுவதாக இல்லை

Published on

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள குழுக்கள் பற்றிய உண்மையை வெளிப்படுத்துவது ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னிலைப்படுத்தி, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி வழங்குவதாக உறுதியளித்ததன் காரணமாக மக்கள் ஆணையுடன் பாராளுமன்றத்திற்கு வந்த 134 பேரால் தற்போதைய ஜனாதிபதியை நியமிக்கப்பட்டதன் அடிப்படையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான பிரதான சூத்திரதாரிகளை கண்டறியும் பொறுப்பும் உண்மையை கண்டறியும் பொறுப்பும் தற்போதைய ஜனாதிபதிக்கும் உண்டு என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்நேரத்தில் யாரும் பேதம் பாராது அனைவரும் உண்மையை பேச வேண்டும் என்றும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடிப்படையாகக் கொண்ட பிணங்கள் மீது நடந்திய அந்த அரசியலை தாம் நிராகரிப்பதாகவும், இந்நேரத்தில் உண்மை நாட்டுக்கு தேவைப்பட்டாலும், அரசாங்கம் இந்த உண்மையை மறைப்பது எந்த தரப்பை பாதுகாக்கவென கேள்வி எழுப்புவதாகவும், அரசாங்கம் தொடர்ந்து உண்மையை மறைத்தால், பயங்கரவாதத்திற்கு எதிராக எதிர்க்கட்சி உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை அவர்களுக்கு ஆதரவாக முன்நிற்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

தென்னை உற்ப்பத்தி செய்யும் விவசாயிகள் குழுவுடனான சந்திப்பின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் இந்நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியின் பின்னணியில், அந்தத் தாக்குதலின் பின்னணியில் திட்டமிட்டவர்கள், பிரதானமாக செயற்பட்டவர்கள், பிரதான சூத்திரதாரிகளாக செயற்பட்டவர்கள் தொடர்பில் ஏற்பட்ட குழப்பம் தொடர்பில் அரசாங்கத்திடம் இருந்து உண்மை என்னவென்று கேள்வி எழுப்புவதாகவும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய உண்மையைக் கண்டறிய ஒரு அரசாங்கமாக ஏன் ஆர்வமற்று செயற்படுகின்றது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.

சர்வதேச நிறுவனங்கள் உட்பட பல்வேறு தரப்புகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் தொடக்க ஏற்பாட்டு குழு குறித்து சந்தேகத்திக்கிடமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ள நிலையில் உண்மை என்ன? உண்மையைக் கண்டறிவதில் அரசாங்கம் ஏன் அக்கறை காட்டுவதாக இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வினாத்தாளை பகிர்ந்த அறுவர் கைது

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளை கையடக்கத் தொலைபேசி மூலம் பகிர்ந்ததாக கூறப்படும் அனுராதபுரத்தில் உள்ள பரீட்சை...

கூட்டமைப்பில் இருவர் ரணிலுக்கு ஆதரவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களான சசிகலா ரவிராஜ் மற்றும் கலைஅமுதன் சேனாதிராஜா ஆகியோர் யாழ் தேர்தல் பிரசாரத்தின் போது...

தேர்தல் பணிக்காக 63,000 பொலிசார்

ஜனாதிபதி தேர்தல் பாதுகாப்பு மற்றும் ஏனைய கடமைகளுக்காக 63,000 பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாக்கு எண்ணும் நிலையங்கள் மற்றும்...