ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டியில் இந்திய அணி 6.1 ஓவர்களுக்குள் விக்கெட் இழப்பின்றி 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது.
ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று (17) இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்து ஆடிய இலங்கை அணி 15.2 ஓவர்களில் 50 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
பந்து வீச்சில் இந்தியா அணி சர்பாக சிராஜ் 6 விக்கெட்டுகளையும் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் பும்ரா 1 விக்கெட்டுயையும் பெற்றனர்.