பேருவில் இருந்து வேற்றுகிரகவாசிகளை கொண்டு வந்ததாக குற்றச்சாட்டு

111

சமீபத்தில் மெக்சிகோ பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேற்றுகிரகவாசிகளின் அசாதாரண உடல்களை வழங்கியமை தொடர்பில் நாடாளுமன்றுக்கு முன்வைத்த மெக்சிகோ பத்திரிகையாளர் ஜேமி மௌசன் (70) மீது பேரு அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஜேமி மௌசன், மெக்சிகோ பாராளுமன்றத்தின் முன் வேற்றுகிரகவாசிகள் என சந்தேகிக்கப்படும் உடல்களை காட்சிப்படுத்தி, அவை 2017 ஆம் ஆண்டு பேருவில் தமக்கு கிடைக்கப் பெற்றதாக கூறியிருந்தார்.

பேருவில் இருந்து மெக்சிகோவிற்கு படிமமாக்கப்பட்ட வேற்றுகிரகவாசிகளின் உடல்களை கொண்டு சென்றதாக ஜேமி மௌசன் மீது பேரு அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது சட்டவிரோதமான செயல் என்றும், பேரு நாட்டு அரசு இதுபற்றி எதுவும் அறியவில்லை என்றும் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.

பேருவில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டால், அவை பேருவைச் சேர்ந்தவை என்றும், அவற்றை இரகசியமாக மெக்சிகோவிற்கு கொண்டு செல்வது தவறு என்றும் ஜேமி மௌசன் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பதிலளித்த ஜேமி மௌசன், பேருவிலிருந்து மெக்சிகோவிற்கு புதைபடிவ உடல்களை எப்படி கொண்டு வந்தேன் என்பதை எச்சந்தர்ப்பத்திலும் வெளியிட மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here