follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP1நாட்டை விட்டு வெளியேறிய தாதிக்கு 3 மாதங்கள் சம்பளம் வழங்கப்படமை குறித்து விசாரணை

நாட்டை விட்டு வெளியேறிய தாதிக்கு 3 மாதங்கள் சம்பளம் வழங்கப்படமை குறித்து விசாரணை

Published on

ஹதரலியத்த பிரதேச வைத்தியசாலையில் பணிபுரிந்து மூன்று மாதங்களுக்கும் மேலாக பணிக்கு சமூகமளிக்காமல் வெளிநாட்டுக்குச் சென்ற தாதி ஒருவருக்கு சம்பளமாக 03 இலட்சம் ரூபாவை வழங்கிய சம்பவம் தொடர்பில் கண்டி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த தாதியர் கடந்த மார்ச் மாதம் திடீரென வேலையை விட்டுவிட்டு சிங்கப்பூரில் தாதியராக வேலைக்குச் சென்றது தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் கண்டி மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரியொருவர் நடத்திய விசாரணையில் தெல்தெனிய வைத்தியசாலையில் இருந்து ஹதரலியத்த வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதி, சேவையிலிருந்து விலகுவதாக நிர்வாகத்திற்கு அறிவிக்கவில்லை என தெரிவித்தார்.

சேவையில் இருந்து விலகி வெளிநாடு சென்று சுமார் மூன்று மாதங்கள் ஆன நிலையில் குறித்த தாதியின் மாதாந்த சம்பளம் அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வு செய்த போது இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் கண்டி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சேனக தலகாவினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஹதரலியத்த வைத்தியசாலையின் ஊழியர்கள் பலரிடமும் மாகாண சபைக்குட்பட்ட வைத்தியசாலைகளின் சம்பள கொடுப்பனவு தொடர்பான ஆவணங்களுக்கு பொறுப்பான அதிகாரிகள் குழுவிடமும் தற்போது வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் செலுத்தப்பட்ட கொடுப்பனவுகளை சம்பந்தப்பட்ட அதிகாரியிடமிருந்து மீளப்பெறுவதற்குத் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வீதி பராமரிப்பு – ரயில் பாதைக்கு தற்காலிக பூட்டு

களனிவெளி ரயில் மார்கத்தில், பேஸ்லைன் வீதி மற்றும் நாரஹேன்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான வீதி பராமரிப்புக்காக தற்காலிகமாக மூடப்படும்...

ரம்பொடையில் வேன் வீதியை விட்டு விலகி விபத்து – 11 பேருக்குக் காயம்

ரம்பொடவில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் வேன் ஒன்று கவிழ்ந்து இன்று (14) ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 12 பேர்...

கெஹெலியவிற்கு எதிரான வழக்கிற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மருந்து கொடுக்கல் - வாங்கல் தொடர்பான வழக்கிற்கு மூவரடங்கிய...