follow the truth

follow the truth

May, 14, 2024
HomeTOP2சிறைச்சாலைகளில் தட்டம்மை தடுப்பூசி திட்டம்

சிறைச்சாலைகளில் தட்டம்மை தடுப்பூசி திட்டம்

Published on

கொழும்பு சிறைச்சாலைகளில் தட்டம்மை நோய் பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் இந்நோயினால் பாதிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, அண்மைய நாட்களில் மகசின் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளிலும் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்ட கைதிகள் பதிவாகியுள்ளனர்.

இந்த நோயினால் பாதிக்கப்பட்ட சுமார் 30 கைதிகள் தற்போது வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், இந்நோய் பரவுவதை தடுக்கும் வகையில் சிறைச்சாலையில் தடுப்பு ஊசி போடும் திட்டத்தையும் சிறைச்சாலை திணைக்களம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

சிறைத்துறை அதிகாரிகளின் விருப்பப்படி உரிய தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

LTTE மீதான தடையை நீடித்தது இந்தியா

LTTE அமைப்பு மீது காணப்படும் தடையை மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடிப்பதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மக்கள் மத்தியில் பிரிவினைவாத...

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நாளை முதல் அத்தியாவசிய சேவைகளையும் புறக்கணித்து தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக...

சிறுவர்களிடையே பரவி வரும் வைரஸ் காய்ச்சல்

காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு, தசை அல்லது உடல் வலி, தலைவலி மற்றும்...