உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழு அறிக்கையின் தகவல்களை மக்களுக்கு வழங்க முடியாது

758

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள இரகசிய சாட்சி குறிப்புகள் அடங்கிய ஆவணங்களை பொதுமக்களுக்கு வழங்க முடியாது என மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று ஆரம்பமான பாராளுமன்ற அமர்வில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன,

“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடங்கிய இரகசிய சாட்சியக் குறிப்புகள் அடங்கிய ஆவணங்களை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வெளியிடாமை மற்றும் பல்வேறு இலத்திரனியல் மற்றும் அச்சு மூலம் பொய்யான தகவல்கள் தொடர்பில் இந்த சபையில் எழுப்பப்பட்ட விடயங்கள், இந்த நாட்களில் ஊடகவியலாளர்கள் குறித்த சாட்சி குறிப்புகள் அடங்கிய ஆவணங்களை பொதுமக்களுக்கு வழங்காமை தொடர்பில் விளம்பரங்கள் இடம்பெற்று வருவதால் அது தொடர்பில் சரியான நிலைமையை இந்த கௌரவ சபைக்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.

ஜனாதிபதியின் செயலாளர் 03/03/2022, 14/03/2022 திகதியிட்ட கடிதத்தில், சம்பந்தப்பட்ட சாட்சிகளின் அடையாளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, இரகசிய சாட்சி குறிப்புகள் உள்ளிட்ட தகவல்களை பொதுமக்களுக்கு திறக்க முடியாது. பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் மேற்பார்வையின் கீழ் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் குறிப்புக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதியின் செயலாளர் 09/12/2023 கடிதத்தில் மீண்டும் வலியுறுத்தியுள்ளார் என்பதை இந்த கௌரவ சபைக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here