துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

246

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்கும் நடவடிக்கை ஒக்டோபர் முதலாம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 31 ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த தினத்தின் பின்னர் 2024 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி அனுமதிப் பத்திரம் புதுப்பித்தல் 31 டிசம்பர் 2023க்குப் பின் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஆயுதங்கள் கட்டளைச் சட்டத்தின் 22வது பிரிவின் விதிகளின்படி செல்லுபடியாகும் அனுமதிப் பத்திரம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

2024/2025 ஆம் ஆண்டிற்கான தனியார் பாதுகாப்பு முகவர் நிறுவனங்களின் பதிவு புதுப்பித்தல் 01.10.2023 முதல் 31.12.2023 வரை மேற்கொள்ளப்படும். இக்காலக்கெடுவிற்குப் பின் மேற்கொள்ளப்படும் புதுப்பித்தல்களுக்கு அபராதம் விதிக்கப்படும் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here