நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக அத்தனகலு ஓயா மற்றும் நில்வலா கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
அத்தனகலு ஓயா பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே குறித்த பிரதேசங்களினூடாக செல்லும் வீதிகளில் பயணிக்கும் போது அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் பெய்து வரும் கடும் மழையினால் 12 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலங்களில் நீர்கொழும்பில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், 97 மில்லிமீற்றராக பதிவாகியுள்ளது.