follow the truth

follow the truth

May, 16, 2024
HomeTOP2பெண்கள் பாதுகாப்புக்கான மத்தியஸ்தானங்களை நிர்மாணிக்க திட்டம்

பெண்கள் பாதுகாப்புக்கான மத்தியஸ்தானங்களை நிர்மாணிக்க திட்டம்

Published on

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய நாட்டில் ஆண், பெண் பாலினம் சார்ந்த வன்முறைகளை தடுப்பதற்கான மிக முக்கியமான 03 சட்டங்களை கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகாரம், சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.

பெண்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியிருக்கும் அதேநேரம், 10 மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் பெண்கள் பாதுகாப்புக்கான மத்தியஸ்தானங்களை நிர்மாணிப்பதற்கும் திட்டமிட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பெண்களின் பிரச்சினைகளை அறிவிப்பதற்காக தற்போதும் 24 மணித்தியாலங்கள் இயங்கும் 1938 என்ற தொடர்பு இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் விட்டுச் செல்லப்படும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக “கவுலுவ” என்ற வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

கர்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான 45,000 போஷாக்கு கொடுப்பனவு வழங்கபட்டு வரும் நிலையில், 6 மாதங்கள் வரையான கர்ப காலத்திலும் பாலூட்டும் 4 மாதங்களிலுமாக 10 மாதங்களுக்கு அந்தச் சலுகையை பெற்றுக்கொள்ள முடியும்.

மறுமுனையில் 2023 ஆம் ஆண்டின் 155,000 பாலர் பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

போஷாக்கு குறைப்பாடு இருப்பதாக அறியப்பட்டுள்ள மொனராகலை, காலி, முல்லைத்தீவு, அனுராதபுரம், நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களின் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு போஷாக்கு மிகுந்த பிஸ்கட்டுக்களை வழங்க எதிர்பார்த்திருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

சட்டத்தின் ஆட்சி இல்லாமல் ஒரு நாடு முன்னேற முடியாது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதித்துறையின் முன்னேற்றத்திற்காக செய்ய வேண்டிய அனைத்தையும் செய்துள்ளார். ஒரு நாட்டுக்கு நீதித்துறை மிகவும் முக்கியமானது...

ஏப்ரலில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

2024 ஏப்ரல் மாதத்தில் 148,867 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது...

மேலும் 40,000 பேரை இஸ்ரேலில் தொழிலுக்காக அனுப்புவோம்

பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதன் மூலம் இஸ்ரேலிய போரை நிறுத்த முடியாது என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்...