புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வெளியீடு குறித்து விசேட விசாரணை

911

புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக விநியோகிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் பரீட்சை திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சட்டவிரோத செயலில் ஈடுபடும் குழுக்களுக்கு எதிராக தரம் பாராமல் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

புலமைப் பரீட்சைக்குப் பின்னர் வினாத்தாள்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதன் மூலம் பரீட்சையின் இரகசியத்தன்மை பாதிக்கப்படாது. இருப்பினும் பரீட்சை நிறைவடைந்து வீடு சென்ற பிள்ளைகளிடம் பரீட்சை வினாத்தாள்களை மீள விவாதிப்பது அவர்களை மிகவும் மனஉளைச்சலுக்குள்ளாக்கும்.

இவ்வாண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நேற்று ஞாயிற்றுக்கிழமை 3 இலட்சத்து 37 ஆயிரத்து 956 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here