பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 மாணவர்கள் காயமடைந்தனர்.
கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட மாவதுர கலைமகள் தமிழ் கல்லூரியின் மைதானத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த மூன்று மாணவர்களும் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வெடிப்பு எதனால் ஏற்பட்டது என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் குறிப்பிடப்பட்டுள்ளனர்.