புகையிரத நேர அட்டவணையில் இன்று முதல் மாற்றம்

744

வடக்கிற்கான புகையிரத நேர அட்டவணையில் இன்று (21) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிற்பகல் 1.40 மணிக்கு காங்கேசந்துறையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் கல்கிஸ்சை வரை பயணித்த யாழ்தேவி புகையிரதம் இன்று முதல் காலை 10 மணிக்கு காங்கசந்துறை நிலையத்தில் இருந்து புறப்பட உள்ளதாக புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சனிக்கிழமை அதிகாலை 5.20 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து காங்கசன்துறை வரை பயணித்த புகையிரதத்தின் நேரம் காலை 5.30 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொல்கஹவெலயில் இருந்து மஹவ சந்தி வரை காலை 5.30 க்கு செல்லும் தினசரி புகையிரதத்தின் நேரம் காலை 5.25 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக குருநாகலில் இருந்து காலை 8.55 க்கு மஹவ சந்தி வரை செல்லும் தினசரி புகையிரதத்தின் நேரம் காலை 9.15 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here