இராஜாங்க அமைச்சர் டயனா கமனே தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு நாளை மறுதினம் நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் கூடவுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, சுஜித் சஞ்சய, மற்றும் ரோஹன பண்டார ஆகியோருக்கிடையிலான மோதல் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டநிலையிலேயே குறித்த விடயம் தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்;டது.
பக்கசார்பற்ற வகையில் விசாரணைகளை மேற்கொண்டு அதற்குரிய தீர்வினை வழங்குமாறு இராஜாங்க அமைச்சர் டயனா கமகே நாடாளுமன்றில் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.