காலி கடற்பரப்பில் நீண்ட நாள் மீன்பிடி படகிலிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் இன்று கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
219 கிலோகிராமிற்கும் அதிக தொகை ஹெரோயின் போதைப்பொருள் படகிலிருந்து கைப்பற்றப்பட்டதுடன், இதன் பெறுமதி 4500 மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படையின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், கடற்படையின் விஜயபாகு கப்பலைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
குடாவெல்ல, திஸ்ஸமஹாராம, கொட்டகொட மற்றும் மாமடல ஆகிய பகுதிகளை சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.