follow the truth

follow the truth

July, 19, 2024
Homeஉள்நாடுஒக்டோபரில் 77ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு

ஒக்டோபரில் 77ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு

Published on

இந்த மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் 77ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த மாதம் 77 ஆயிரத்து 763 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளதுடன், 20,369 இந்திய பிரஜைகள் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, ரஷ்யாவில் இருந்து 7 ஆயிரத்து 89 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 6 ஆயிரத்து 287 சுற்றுலாப்பயணிகளும், ஜேர்மனியில் இருந்து 4 ஆயிரத்து 923 சுற்றுலாப்பயணிகளும் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

இந்த வருடம் ஒரே ஒரு தேர்தல்தான்

இவ்வருடம் ஒரேயொரு தேர்தல் மட்டுமே நடத்தப்படும் என நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன...

மூதூரில் பஸ் கவிழ்ந்து விபத்து – 30 பேர் மருத்துவமனையில்

மூதூர் - கங்கை பாலம் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில்...

அரசு வழங்கும் சலுகைகள் நுகர்வோருக்கு வழங்காவிட்டால் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயம் செய்ய நேரிடும்

அரசாங்கம் வழங்கும் சலுகைகளை நுகர்வோருக்கு வழங்குவதற்கு வர்த்தகர்கள் செயற்படாவிட்டால் குறிப்பிட்ட சில பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நேரிடும்...