follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉள்நாடுஇங்கிலாந்தை இலகுவாக வெற்றிகொண்டது இலங்கை அணி

இங்கிலாந்தை இலகுவாக வெற்றிகொண்டது இலங்கை அணி

Published on

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 33.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 156 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பில் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) அதிகபட்சமாக 43 ஓட்டங்களையும் ஜானி பேர்ஸ்டோவ் (Jonny Bairstow) 30 ஓட்டங்களையும் டேவிட் மாலன் (Dawid Malan) 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் லஹிரு குமார (Lahiru Kumara) 3 விக்கெட்டுக்களையும் கசுன் ராஜித (Kasun Rajitha) மற்றும் ஏஞ்சலோ மேத்வ்ஸ் (Angelo Mathews) ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

பின்னர் 157 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 25.4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் பெதும் நிஸ்ஸங்க (Pathum Nissanka) ஆட்டமிக்காமல் 77 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றதுடன் சதீர சமரவிக்ரமவும் (Sadeera Samarawickrama) ஆட்டமிழக்காமல் 65 ஓட்டங்களை பெற்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கோபா குழுவில் முன்னிலையான ரயில்வே திணைக்களம்

பல வருடங்களாக கணக்காய்வு அறிக்கைகளை முறையாக சமர்ப்பிக்க ரயில்வே திணைக்களம் தவறியுள்ள விடயம் கோபா குழுவின் முன்னிலையில் தெரியவந்தது. இதன்...

இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையினால் உஷாராகும் வாகன இறக்குமதி

நான்கு வருடங்களுக்குப் பின்னர், இடைநிறுத்தப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டமையினால் வாகன இறக்குமதி துறையினர் நன்மையடைந்து வருகின்றனர். இதற்கமைய தற்போது...

ஹஜ் யாத்திரை செல்லும் முதலாவது இலங்கை யாத்திரிகர்கள் குழு பயணம்

இம்முறை ஹஜ் யாத்திரை செல்லும் முதலாவது இலங்கை யாத்திரிகர்கள் குழு இன்றைய தினம் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது. அவர்களை யாத்திரைக்கு...