சட்ட விரோதமாக அதிகரிக்கப்பட்ட மின் கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும்

325

வருடத்திற்கு இருமுறை மின் கட்டணத்தை திருத்தம் செய்வதாக அரசாங்கம் உறுதியளித்தாலும், மின்சார கட்டணம் 3 ஆவது தடவையாகவும் திருத்தப்பட்டு கிட்டத்தட்ட 500 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இதனால் பெரும்பான்மையான மக்கள் நிர்க்கதிக்காளாகியுள்ளனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மக்கள் படும் துன்பம் ஆட்சியாளர்களுக்கு புரியவில்லை என்றும், மின்கட்டண உயர்வால் ஒரு குடும்ப அலகு உணவு மற்றும் கல்விக்கு ஒதுக்கும் செலவுப் பணம் கூட குறைந்துள்ளதாகவும், நாடு எவ்வளவு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டாலும் மக்கள் படும் துன்பங்களைப் புரிந்து கொள்ள வேண்டும், ஆனால் அரசாங்கத்திற்கு அவ்வாறான புரிதல் இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போது ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரக் கட்டணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே வீதியில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர் என்றும், அடக்குமுறை, அசௌகரியம், ஏழ்மை போன்றவற்றால் சுமக்க முடியாத சுமையைத் சுமந்துகொண்டிருக்கும் மக்கள் தாங்களாகவே வெகுஜன அலை எழுந்துள்ளனர் என்றும், சட்ட விரோதமாக அதிகரிக்கப்பட்ட மின் கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும் என்றும், தவறான தரவுகளை முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த செயற்பாட்டிற்கு ஜனாதிபதி, அமைச்சர் மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு என்பன பொறுப்பு கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here