ஜாஎல – நீர்கொழும்பு பஸ் போக்குவரத்து வழித்தட இலக்கம் 273 இல் உள்ள தனியார் பஸ் சாரதிகள் திடீரென பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
வெலிசறை டிப்போ அதிகாரிகள் குழுவொன்று தம்மை தாக்கியதாகக் கூறி அவர்கள் இந்தப் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.