கிரிக்கெட்டை நாசமாக்கும் கூட்டத்தை விரட்டியடிக்க ஒன்றிணைவோம்

230

கிரிக்கெட் விளையாட்டிற்காக இனம், மதம், சாதி, வர்க்கம், கட்சி வேறுபாடின்றி அனைவரும் ஒன்றாய் கைகோர்கின்றனர் என்பதனால், இங்குள்ளவர்களும் ஒன்றாய் ஒரு தீர்மானத்திற்கு வந்து, நீதிமன்ற உத்தரவு என்ற போர்வையில் கிரிக்கெட் விளையாட்டை அழிப்பதற்கு எதிராக பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, இந்த ஊழல் பேர் வழி கும்பலை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நீதித்துறை மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவன் என்றாலும், நேற்று ஒரு பெரிய துயரக சம்பவம் நடந்ததாகவும், இந்நாட்டில் கிராமிய பாடசாலை, மாவட்டம் மற்றும் மாகாண கிரிக்கெட் அணிகளுக்கு கிடைக்க வேண்டிய பணமும் ஒதுக்கீடுகளும் கிரிக்கெட் நிறுவனத்தை ஆளும் கும்பல், சூதாட்டக்காரர்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளால் விழுங்கப்படுகின்றன என்றும், நாடு குறித்து ஐ சி சிக்கு தவறான பிம்பத்தை காட்ட முயற்சிக்கின்றனர் என்றும், கிரிக்கெட் ஏகபோகத்தை உருவாக்க சூதாட்டக் கும்பல், பாதாள உலகக் கும்பல், கப்பம் கோரும் கும்பல்களுக்கு இடமளிக்கக் கூடாது என்றும், ஜனாதிபதியின் ஆதரவுடன் இந்த பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

யதார்த்தமாக விளையாட்டுத்துறை அமைச்சருடன் இணைந்து இலங்கை கிரிக்கெட்டை ஆட்கொண்டிருக்கும் திருடர் கூட்டத்தை துரத்தியடிக்க தயார் என்றும், ஆளும் தரப்பு உறுப்பினர்கள் இதற்கு விருப்பமா என கேள்வி எழுப்புவதாகவும், நிலையியற் கட்டளைகளை முன்வைத்து இதனை சீர்குலைக்க வேண்டாம் எனவும், இது தேசிய பிரச்சினை என்பதனால் சகலரும் ஒரு நிலைப்பாட்டில் ஒன்றிணையுமாறும் கோரிக்கை விடுத்தார்.

ஊழல் நிறைந்த கிரிக்கெட் நிர்வாகத்திற்கு எதிராக இன்று (08) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here