தீபாவளி தினத்தை முன்னிட்டு சபரகமுவ மாகாணத்தின் அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 13ம் திகதி விடுமுறை வழங்க சபரகமுவ ஆளுநர் நவீன் திஸாநாயக்கவினால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை எதிர்வரும் 12ம் திகதி ஞாயிற்றுகிழமை வருவதால், மறுநாள் 13ம் திகதி விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
13ம் திகதி வழங்கப்படும் விடுமுறை தினத்திற்காக, எதிர்வரும் 18ம் திகதி பாடசாலை நடத்தப்படும் என சபரகமுவ ஆளுநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.