கடும் மழை – பல ஆறுகளில் நீர்மட்டம் அதிகரிப்பு

379

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக பல ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கெசல்கமு ஓயாவின் நீர்மட்டம் நோர்வூட் பிரதேசத்திலிருந்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், தற்போது அதன் பெறுமதி 2.05 மீற்றராக பதிவாகியுள்ளதுடன் அது அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மில்லகந்த பிரதேசத்தில் குடா கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நில்வலா ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்து தல்கஹகொட பிரதேசத்தில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் பனடுகம பிரதேசத்தில் இருந்து நில்வலா ஆற்றின் நீர்மட்டம் 5.59 மீற்றராக பதிவாகியுள்ளது.

அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் துனமலே பிரதேசத்திலிருந்து 4.88 மீற்றராக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here