கொழும்பு தாமரை கோபுரத்தில் ‘பேஸ் ஜம்ப்’ என்ற சாகச நிகழ்வு இன்று(18) முதல் ஆரம்பிக்கப்படும் என தாமரை கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்றும் நாளையும் (19) காலை 9 மணி முதல் இந்நிகழ்வு ஆரம்பிக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நேற்று(17) இதற்கான முன்னோடி நிகழ்வு நடத்தப்பட்டதில் 6 சர்வதேச பேஸ் ஜம்ப் வீரர்கள் கலந்துகொண்டு சாகச நிகழ்வை நடத்தினர்.