பணம் சம்பாதிக்க, இலங்கை கிரிக்கெட் சர்வதேச சமூகத்திற்கு விற்கப்பட்டது

430

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவருக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும், அரசாங்கத்திடம் இருந்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எதிர்கொள்ளும் சவால்களை குறிப்பிட்டு 5 அம்சங்களின் கீழ் இந்த கடிதத்தை சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கிரிக்கெட் போட்டிகளுக்காக விளையாட்டுப் பணிப்பாளர் நாயகத்தின் தலையீடு, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகளின் சம்பள விபரத்தை விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கோருவது, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அனுமதியின்றி இலங்கை பிரீமியர் லீக்கை நடத்த முடியுமாக இருப்பது, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கான யாப்பு இருப்பதாக கூறி விளையாட்டுத் துறை அமைச்சர் மேற்கொள்ளும் தலையீடு, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கணக்காய்வு அறிக்கையை வெளியிட்டதன் மூலம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு,என ஐந்து அம்சங்கள் குறிப்பிடப்பட்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தேசிய விளையாட்டு நிதியத்திற்கு 20 வீதத்தை நன்கொடையாக வழங்குமாறு விளையாட்டு அமைச்சர் கிரிக்கெட் நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுத்தார் என்று சர்வதேச கிரிக்கட் பேரவைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலதிக விடயமாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஒரு கும்பலுக்கு பணம் சம்பாதிப்பதற்காக இலங்கை கிரிக்கெட் விளையாட்டை சர்வதேச சமூகத்திற்கு விற்று இலங்கை கிரிக்கெட் நிறுவனம், இலங்கையில் கிரிக்கெட்டை தடையை பிறப்பித்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here