2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இந்த போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதவுள்ளன.
இந்தநிலையில், போட்டியில் நடுவர்களாக செயல்பட உள்ளவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, கள நடுவர்களாக ரிச்சர்ட் இல்லிங்வொர்த் மற்றும் ரிச்சர்ட் கெட்டில்பரோவும், போட்டி நடுவராக ஆண்டி பைகிராப்ட்டும், 3ஆவது மற்றும் 4ஆவது நடுவர்களாக ஜோயல் வில்சன் மற்றும் கிறிஸ் கேப்னி ஆகியோர் செயல்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவுஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்ட் மார்ல்ஸூம் (Richard Marles) நேரில் காண பார்வையிட உள்ளமையினால் போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மைதானம், அணிகள், பிரமுகர்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குகளுக்காக 4,500 பொலிஸார் சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளதுடன்,
உலகக்கிண்ண இறுதிப்போட்டியை முன்னிட்டு நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சியும் நடத்தப்படவுள்ளது
மாபெரும் இறுதிபோட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பெட் கமிஸ் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.