follow the truth

follow the truth

June, 4, 2024
HomeTOP2ICC க்கு அனுப்பிய கடிதம் - இடைக்காலக் குழு விளையாட்டுச் சட்டத்தை மீறியுள்ளது

ICC க்கு அனுப்பிய கடிதம் – இடைக்காலக் குழு விளையாட்டுச் சட்டத்தை மீறியுள்ளது

Published on

உலகக் கிண்ண இறுதிப் போட்டி நடைபெறவுள்ள இன்றைய நாளில், கிரிக்கெட்டை நேசிக்கும் இந்நாட்டு மக்களுக்கு இன்று புதிய வெளிக்கொணர்வொன்றை விடுவதாகவும், இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கடந்த நவம்பர் 6,7 மற்றும் 9, 2023 ஆகிய திகதிகளில் மேலும் 3 கடிதங்களை சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அனுப்பியுள்ளதாகவும், இக்கடிதங்களை வாசிக்கும் போது இலங்கையில் கிரிக்கெட் எவ்வாறு தடை செய்யப்பட்டது என்பதை புரிந்து கொள்ள முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நவம்பர் 6 ஆம் திகதி எழுதிய கடிதத்தில் இடைக்காலக் குழுவை விமர்சித்துள்ளதுடன், அரசியல் ரீதியான தலையீடுகள் இடம்பெறுவதாகவும், அமைச்சருக்கு அழுத்தம் கொடுக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

இரண்டாவது கடிதத்தின் மூலம் இடைக்காலக் குழு விளையாட்டுச் சட்டத்தை மீறியுள்ளதாகவும், இது சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சட்டத்திற்கு முரணானது என்றும், எவ்வாறேனும் இடைக்கால குழுவொன்றை நியமித்தால் கிரிக்கெட்டை தடை செய்ய நேரிடும் என்று கூறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை, 2024 ஐ சி சி சர்வதேச மாநாடு, T20 போட்டி போன்ற செயல்பாடுகளை பிற நாடுகளுக்கு மாற்ற வேண்டும் என அழுத்தம் விடுக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (19) விசேட காணொலி அறிக்கையொன்றை விடுத்து தெரிவித்தார்.

3 ஆவது கடிதத்தின் மூலம் விளையாட்டுத்துறை அமைச்சரின் முயற்சியாலையே பாராளுமன்ற விவாதம் நடந்ததாகவும், கிரிக்கெட் உறுப்பினர்கள் நீக்கப்பட்டு அதன் சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் கிரிக்கெட் சட்டத்தை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றும், இது ஐ சி சி சட்டத்திற்கு முரணானது என்றும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கிடைக்கும் வருமானத்தில் 20 வீதத்தை விளையாட்டுத்துறை அமைச்சுக்கு கேட்பதாகவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இக்கடிதங்களில் உள்ள உள்ளடக்க தகவல்கள் தவறானவை என்றும், இதில் அரசியல் ரீதியான தலையீடுகள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், இது நட்புவட்டார விளையாட்டு அல்லவென்றும், இது 220 இலட்சம் பேரினதும் விளையாட்டு உரிமையை மீறும் செயலாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

ஏழு நாட்களுக்கு மதுபானசாலைகளுக்கு பூட்டு

எதிர்வரும் ஜூன் மாதம் 18ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நாட்டின் பல பிரதேச செயலகங்களில் உள்ள...

பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படும் திகதி

புதிய கல்வியாண்டுக்கான மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை இம்மாதம் 14ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 5ஆம் திகதி...

தவிடுபொடியாகிறது நரேந்திர மோடியின் 400 என்ற கனவு

இந்திய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களின் அமைவிடமான லோக் சபையில் பெரும்பான்மை பலத்தை மீண்டும் அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடியின் கட்சியான...