கடற்றொழில் அபிவிருத்திக்கு ஜப்பான் நிதியுதவி

160

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் கடற்றொழில்சார் அபிவிருத்திகளுக்காக ஜப்பான் அரசாங்கம் 03 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்கியுள்ளதுடன் அது தொடர்பான ஒப்பந்தம் இன்று (22) நிதி அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது.

இதற்கான ஒப்பந்தத்தில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகொஷி ஹிடேகி (Mizukoshi Hideaki) மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

இந்த நிதியானது கடற்றொழிலாளர்களுக்கான குளிரூட்டல் கட்டமைப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கான நவீன உபகரணங்களை பெற்றுக்கொடுத்தல் போன்றவற்றுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here