ஆசிரியர்களின் சம்பளம் குறித்து கல்வி அமைச்சர்

1460

அடுத்த வருடம் டிசெம்பர் மாதத்திற்குள் பாடத்திட்டத்தை கற்பித்து முடிக்க வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர், இம்மாதம் பாடசாலை விடுமுறை முடிந்து பெப்ரவரி 2 ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டாலும் புத்தாண்டு தொடர்பான பாடசாலை தவணை பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என தெரிவித்தார்.

இதேவேளை, ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அனைத்து அரச ஊழியர்களுக்கும் 10,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

குழந்தைகளின் கல்வி முக்கியம் என்பதால், எத்தனை சவால்கள் இருந்தாலும் அடுத்த ஆண்டு பாடப்புத்தகங்களுக்கு 1,020,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சீருடைகளுக்கு 6,500 மில்லியன் ஒதுக்கப்பட்டது.

காலணிகளுக்கு 2,200 மில்லியன், மதிய உணவிற்கு 16,000, இவை அத்தியாவசியமானவை. அனைவருக்கும் 10,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஆசிரியர் சம்பள முரண்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது. அனைவருக்கும் 10,000 ரூபாய் கிடைக்கும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here