அமெரிக்கா இலங்கையை விட பிச்சை எடுக்கும் நாடு

513

அமெரிக்கா இலங்கையை விட பிச்சை எடுக்கும் நாடு என பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் உதய கம்மன்பில பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

டொலருக்குப் பதிலாக பிட்ஸ் என்ற சர்வதேச நாணய அலகு கொண்டுவரப்பட வேண்டும் என உலகம் தற்போது பேசுவதாக தெரிவித்த கம்மன்பில, அவ்வாறான சர்வதேச நாணய அலகு கொண்டுவரப்பட்டால் அமெரிக்காவின் நிதி பலம் அங்கேயே முடிந்துவிடும் எனவும் தெரிவித்தார்.

அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் கடனை செலுத்துவதற்கும் டொலர்கள் இல்லாத காரணத்தினால், கடந்த வருடம் இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டதாகவும், உள்நாட்டு வர்த்தகம் மற்றும் சர்வதேச வர்த்தகம் டொலரில் நடைபெறுவதனால் அமெரிக்காவை விட வேறு எந்த நாட்டிற்கும் இல்லை எனவும் கம்மன்பில தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here